செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஓவியப் பயிற்சி ஏடு 02



பொருள் சித்திரம்-பென்சில்.

வரையும் முறை:
15 செ.மீ அளவில் ஒரு இணை கோடுவரையுங்கள்.
இணைகோட்டின் அடிப்பக்கத்தை மூடுங்கள்.
மேல்பக்கத்தில் 3 செ.மீ உயரம் கொண்ட ஒரு முக்கோணம் வரைக.
முக்கோணத்தின் அடிப்பக்கத்தில் அரை செ.மீ அளவில் ஒருகோடு வரைந்துகொண்டு அதன் இடையில் W போல கோடு வரைக.
பென்சிலின் அடிப்பகுதியிலிருந்து மேல் பக்கமாக 2.5செ.மீ அளவில் பென்சிலையும் இரப்பரையும் இணைக்கும் அலுமினிய பட்டை அமையுமாறு வளைவு இணைகோடு வரைக.
இரப்பர் பகுதியை கீழ்ப்பக்கம் முனைகளை சற்று வளைத்து வரைக.
W வடிவக்கோட்டின் கீழ் முனையிலிருந்து கீழ் நோக்கி பென்சிலின் பட்டைகள் வருமாறு கோடுகள் வரையவும்.
பென்சிலின் கூர்பகுதியை வரையவும்.
தேவைற்றக்கோடுகளை அழித்து சுத்தமாக வரைந்து கொண்டு வண்ணம் தீட்டவும்.

வரைந்து விட்டீர்களா?
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
தவறாமல் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்...
நன்றி.,!

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் ஓவியங்கள் 11


இது என் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு நான் வரைந்த ஓவியம்.ஏ4 தாளில் அப்சரா பென்சில்களைக் கொண்டு வரைந்தேன்.

புதன், 4 செப்டம்பர், 2013

என் ஓவியங்கள் 10


அன்னை தெரசாவின் இந்த ஓவியத்தை ஐவேரி போர்டில் டிராயிங் நிப்பால் இண்டியன் இங்க் கொண்டு வரைந்தேன்.

என் ஓவியங்கள் 09


மஹாத்மா காந்தி யின் இந்த ஓவியத்தை கேன்வாசில் ஆயில் பெயிண்டால் வரைந்தேன்.

என் ஓவியங்கள் 12


அனுமனின் இந்த ஓவித்தை மெல்லிய பலகையில் எனாமல் பெயிண்டால் வரைந்தேன்.இந்தப்படம் இப்போது இடும்பாவனம் அருள்மிகு ... ..... சத்குணநாதசுவாமி ஆலயத்தில் அம்மன் சன்னதிக்குப் பின்புறம் உள்ள அனுமனின் அர்த்தச்சித்திரத்திற்கு அருகில் வைத்திருக்கிறேன்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஓவியப்பயிற்சி ஏடு01


தன்னிச்சை ஓவியம்-
கேலிச்சித்திரம்.

வரையும்் முறைகள்

முதலில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ளுங்கள்..வட்டத்தின் உள்ளே சற்றுமேல்பக்கமா இரண்டு சிறு வட்டங்களும் அதனுள்ளே ஒவ்வொரு அரை வட்டங்களும் வரைக.
மூக்கிற்காக படத்தில் கண்டவாறு கோடு வரைக,.
காதுகள் முடி ஆகியவற்றை வரைக.
வரைந்து முடிக்கப்பட்ட படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழுங்கள்.

என்ன வரைந்து முடித்து விட்டீர்களா?
அப்புறம் என்ன..உங்கள் கருத்துகளை எழுதலாமே!

மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

நன்றி...!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ஓவியப்பயிற்சி ஏடு -அறிமுகம்


ஓவியப்பயிற்சி ஏடு என்ற தலைப்பில் இப்பதிவைத்தொடர்ந்து பல பதிவுகளை இடி இருக்கிறேன்.ஓவியத்தை எளிய கோடுகளால் சுலபமாக வரையும் முறையை படத்திற்கான
விளக்க ங்களுடன் விளக்கியிருக்கிறேன்.இதைக்கொண்டு ஆர்வமுள்ள எவரும் சுலபமாக வரையப்பழகலாம்..குழந்தைகளுக்குச்சொல்லிக்கொடுக்கலாம்..ஓவிய ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்த பயன்படுத்திக்கொள்ளலாம்..எனப்பல்வேறு பயன் பாட்டை கருதியே இவைகளை அமைத்திருக்கிறேன்...தேவையுள்ளோர் பயன் படுத்திக்கொள்ளுங்கள்,.ஆர்வமுள்ளோருக்கு அறிமுகப்படுத்துங்கள்...
மறவாமல் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.,
நன்றி.,!

என் ஓவியங்கள் 13



என் மகனின் இந்த ஓவியத்தை ஆயில் பெயிண்டால் வரைந்தேன்.

என் ஓவியங்கள்07


சீரடி சாய்பாபாவின் இந்த ஓவியத்தை கலர்பென்சில்களால் சார்ட் பேப்பரில் வரைந்தேன்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

என் ஓவியங்கள்06


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காப்பித்தூள் பயன்படுத்தி ஐவேரி போர்டில் வரைந்தேன்.

என் ஓவியங்கள்08


ஆதித்யாசெர்ரியின் புத்தகத்தில் பென்சில் ஓவியமாக இந்தப்படம் வந்திருந்தது.அதைப்புள்ளி ஓவியமாக வரைந்தேன்.சார்ட் பேப்பரில் இண்டியன் இங்கால் டிராயிங் நிப் கொண்டு வரைந்தேன்.வரைந்த படத்தை வெட்டி வேறு பேப்பரில் ஒட்டினேன்.

என் ஓவியங்கள்05


ஓவியர் ஆதித்யா செர்ரியின் Portrait techniques made easy. என்ற புத்தகத்தைப் பார்த்துக்கொள்ள இந்த ஓவியத்தை வரைந்தேன். மேலே குறிப்பிட்ட புத்தகம் பற்றி சிறந்த ஓவியப்புத்தகங்கள் பகுதியில் பாருங்கள்.

என் ஓவியங்கள்04


மகாத்மா காந்தியடிகளின் இந்த ஓவியம் ஐவேரி போர்டில் வாட்டர் கலரால் வரைந்தேன்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

என் ஓவியங்கள் 02



இந்த சிறுவனின் ஓவியத்தை சார்ட் பேப்பரில் அப்சரா பென்சிலால் வரைந்தேன்.

என் ஓவியங்கள் 03


ஓவியர் ராஜா ரவிவர்மாவின் இந்தஓவியத்தை துணியில் பேனர் ஸ்டைலில் எனாமல் பெயிண்டால் வரைந்தேன்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

என் ஓவியங்கள்01


எனஓவியங
கள01

இணையதளத்திலிருந்து எடுக்கப் பட்ட படத்தை மாதிரியாகக் கொண்டு வரைந்தேன்.A4 சீட்டில் அப்சரா டிராயிங் பென்சில்களால் வரைந்தேன்.

அன்புடன் வரவேற்கிறேன்

வணக்கம்....!.்ஓவியக்்கலைப்பற்றிய ஒரு முழுமையான தளமா
க. இதைஅமைத்திருக்கிறேன்..
நான் வரைந்த ஓவியங்களுடன் நான் பெற்ற ஓவிய அறிவை
உங்கள் முன்பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் ... இத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துக்கூறுங்கள் பகுதியில் மறவாமல் எழுதுங்கள்...

நன்றி...!